திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 4000ஐ தாண்டியுள்ளது. மார்ச் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
அதன்பின்னர் ஏப்ரல் மாதத்தில் 81 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து மே மாதத்தில் 65 பேருக்கும், ஜூன் மாதத்தில் 403 பேருக்கும் நோய்தொற்று கண்டறியப்பட்டது. இதனிடையே ஜூலை மாதத்தில் மட்டும் 2367 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இதன் விளைவாக மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மளமளவென அதிகரித்துள்ளது. அதிலும் தற்போது 8 நாட்களில் மட்டும் 1000க்கும் அதிகமான தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதனிடையே நேற்று (ஆகஸ்ட் 10) மட்டும் 173 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4051ஆக அதிகரித்துள்ளது. இதில் 3262 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள 714 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் இதுவரையிலும் 75 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.