திண்டுக்கல்: வேடசந்தூர் வட்டம் வடமதுரை மற்றும் அய்யலூர் எரியோடு போன்ற பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் ஆடு, மாடு திருடு போவதாக விவசாயிகள் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் தாமரைப்பாடியை சேர்ந்த சின்னமுருகன்(55) என்பவரின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 50,000 மதிப்புள்ள மாடு திருடு போனது.
இதனையடுத்து விவசாயி சின்னமுருகன் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து விவசாயி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த வடமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது முள்ளிப்பாடியில் திருடி வந்த மாட்டை விற்பனை செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில், தாமரைப்பாடியை சேர்ந்த சிவகுமார்(30) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் மாடு திருடி சந்தையில் விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
நள்ளிரவில் மாட்டை திருடி இழுத்து சென்ற இளைஞர் தொடர்ச்சியாக எரியோடு கோவிலூரா, வடமதுரை, அய்யலூர், குஜிலியம்பாறை பாளையம் ஆகிய பகுதிகளில் மாடுகள் திருடப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நள்ளிரவில் இளைஞர் மாட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:பைக்கில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் திருட்டு; சிசிடிவி வெளியாகி பரபரப்பு