தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா தொடங்கியது!

திண்டுக்கல்: இலக்கியக் களம் சார்பாக திண்டுக்கல்லில் டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா நேற்று டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.

dindigul book exhibition inauguration function  திண்டுக்கல் புத்தகத் திருவிழா  dindigul book fair  திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்  dindigul district news
திண்டுக்கல் புத்தகத் திருவிழா

By

Published : Nov 29, 2019, 8:21 AM IST

திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பாக 8ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். நேற்று தொடங்கிய புத்தகத் திருவிழா நிகழ்வு டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த 11 நாட்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், விநாடி வினா, சிந்தனை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

புத்தகக் கண்காட்சியில் முக்கியப் பதிப்பகங்களான காலச்சுவடு, கிழக்குப் பதிப்பகம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களிலிருந்து அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் புத்தகத் திருவிழா

அதில், குழந்தைகளைக் கவரும் வகையிலான புத்தகங்கள், தமிழ் இலக்கியம், சரித்திரம், மருத்துவம் உள்ளிட்ட இரண்டு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் உள்ளன.

இதையும் படிங்க: தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 14 ஆண்டுகளில் 30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!

ABOUT THE AUTHOR

...view details