திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நண்பனின் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் கருப்பசாமி (20), கார்த்திக் (20) இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்திலிருந்து ஸ்ரீராமபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, தேனியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து ஆண்டரசன்பட்டி வளைவில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
அரசுப்பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு! - திண்டுக்கல் அருகே அரசுப்பேருந்து
திண்டுக்கல்: நண்பரின் உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் மீது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
விபத்தில் மரணமடைந்த மாணவர்கள்
இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னிவாடி காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மற்றும் இருசக்கரவாகனத்தை கன்னிவாடி காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.