தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 வயது சிறுமியை மணம் முடித்து பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது போக்சோ! - dindigul pocso arrest

திண்டுக்கல்: 17 வயது சிறுமியை ஏமாற்றி வலுக்கட்டாயமாகத் தாலிகட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

arrest
arrest

By

Published : Aug 29, 2020, 12:41 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், இவர் கொடைரோடு பேருந்து நிலையம் அருகில் காய்கறிக் கடை வைத்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவியும் மூன்று பெண் பிள்ளைைகளும் உள்ளனர். இவரது மூன்று மகள்களும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவருகின்றனர்‌.

இந்நிலையில் தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் விடுமுறையால் முருகேசனின் 17 வயதான இரண்டாவது மகள் அவருக்கு உதவியாக காய்கறிக் கடையில் வியாபாரம் செய்துள்ளார்.

கடந்த 22ஆம் தேதியன்று தனது இரண்டாவது மகள் காணவில்லை என முருகேசன் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே கடந்த 25ஆம் தேதியன்று சிறுமி அழுதுகொண்டே கழுத்தில் தாலியுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரிடம் விசாரித்தபோது கடையிலிருந்து வீட்டில் இறக்கிவிடுவதாக இருசக்கர வாகனத்தில் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் பசுபதிராஜா (24) என்பவர் தனது வீட்டில் அடைத்துவைத்து வலுக்கட்டாயமாகத் தாலிகட்டி மூன்று தினங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்‌.

பின்னர் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி 'நீயாக ஓடி விடு' என்று மிரட்டி மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறி சிறுமி அழுதுள்ளார்.

புகாரின்பேரில், அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பசுபதி விவசாயம் செய்துவருவதும் தனது விவசாய நிலத்தில் விளையும் பொருள்களை தினமும் கொடைரோடு சந்தைக்கு கொண்டுவருவதும் வழக்கம்‌‌. அப்படி வரும்போது காய்கறிக் கடையில் இருந்த சிறுமியிடம் பேசி பழகியுள்ளார்‌. சம்பவத்தன்று சிறுமியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி தனது சொந்த ஊரான பள்ளப்பட்டி ஆறுமுகநகருக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக வீட்டில் அடைத்துவைத்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தாலி கட்டி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்‌.

இதனையடுத்து பசுபதி ராஜாவின் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு காவல் துறையினர் தேடிச்சென்றபோது, ஏற்கனவே திருமணமாகி அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. மேலும் பசுபதி பற்றி விசாரித்தபோது மூன்று தினங்களுக்கு மேலாக வீட்டிற்கு வரவில்லை எனவும் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளனர். தொடர்ந்து பசுபதி செல்போன் சிக்னல் மூலம் திண்டுக்கல்லில் மறைந்து இருப்பது தெரியவந்தது.

திண்டுக்கல்லில் உள்ள மற்றொரு பெண்ணின் வீட்டில் பதுங்கியிருந்த பசுபதியை காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணையும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கு தங்கியிருந்தது தெரியவந்தது.

எனவே உடனடியாக அவரை கைதுசெய்த அம்மையநாயக்ககனூர் காவல் துறை, காவல் ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான தனிப்படையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இரண்டு பிள்ளைகளின் தகப்பன் மனைவியுடன் வாழும்போதே 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்வதாக ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கண்ணாடிக்கு பின் இருந்த ரகசிய அறை - விடுதியில் பாலியல் தொழில் நடத்திய மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details