திண்டுக்கல் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெகு நாட்களாக இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தை திருடும் திருடர்கள் சிக்கிய சிசிடிவி காட்சி ஆதாரங்களை காவல் துறையினர் சேகரித்தனர். இதனடிப்படையில் தற்போது திண்டுக்கல் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில், புறநகர் குற்றத்தடுப்பு தனிப்படையினர் சார்பு ஆய்வாளர் ஷேக் தாவூத், அழகர்சாமி உள்ளிட்ட காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல் லட்சுமண புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளவுக்கு அதிகமான வாகனங்கள் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருடிய ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது - dindigul bike theft arrest
திண்டுக்கல்: தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை, சிசிடிவி ஆதாரங்கள் மூலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
arrest
இதுவரை எவ்வளவு வாகனங்கள் திருடப்பட்டுள்ளது, இதில் இன்னும் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கண் இமைக்கும் நேரத்தில் ராயல் என்ஃபீல்ட் வாகனம் திருட்டு - வெளியான சிசிடிவி வீடியோ
Last Updated : Aug 29, 2020, 10:44 PM IST