திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றினால் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 28 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இன்று கரோனா பாதித்த நான்கு வயது சிறுவன் உள்பட 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே குணமடைந்து வீடு திரும்புபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்ட இணை இயக்குநர் பூங்கோதை, மருத்துவக் கல்லூரி டீன் விஜயகுமார் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்புபவர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: கரோனாவிலிருந்து மேலும் 8 பேர் குணமடைந்தனர் - Dindigul District News
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திண்டுக்கல்லில் கரோனாவிலிருந்து நான்கு வயது சிறுவன் உட்பட 8 பேர் குணம்
இது குறித்து மாவட்ட இணை இயக்குநர் பூங்கோதை பேசியதாவது, "திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்குள்ள மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தொற்று அனைத்தும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்தான். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்துவந்த 11 பேர், சென்னையில் இருவர், குஜராத்தில் ஒருவர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் குணமடையும் பட்சத்தில், திண்டுக்கல் மாவட்டம் ஆரஞ்ச் மண்டலத்திலிருந்து பச்சை மண்டலமாக விரைவில் மாறும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சை பெற்ற காவல்துறை அலுவலரின் அனுபவம்!