திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துச்சாமி தலைமையில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையச்சரகத்திற்கு உள்பட்ட ஆர்.வி.நகரில் 12 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த கார்த்திக்குமார், குணசீலன் ஆகியோரை கைது செய்த தனிப்படை சார்பு ஆய்வாளர் மாரிமுத்து, தலைமைக் காவலர்கள் சந்தியாகு, சங்கரநாராயணன் ஆகியோரை டிஐஜி முத்துச்சாமி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு டிஐஜி பாராட்டு - Reward
திண்டுக்கல்: சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு டிஐஜி முத்துச்சாமி பாராட்டு சான்றிதழ், வெகுமதி போன்றவற்றை வழங்கி ஊக்குவித்தார்.
அதேபோல் கடந்த ஒரு மாதத்தில் தாடிக்கொம்பு காவல் நிலைய சரகத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தாடிக்கொம்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, கொடைக்கானல் அண்ணாசாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த துணி வியாபாரி சந்திரன் என்பவரை தன்னுடைய காரில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த கொடைக்கானல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாதவராஜா ஆகியோரின் சிறந்த பணியினை பாராட்டி டிஐஜி முத்துச்சாமி பணப் வெகுமதி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி காவலர்களை ஊக்குவித்தார்.