தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் மனு அளித்தனர்.

மாற்றுதிறனாளிகளை ஏமாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியரிடம் மனு
மாற்றுதிறனாளிகளை ஏமாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியரிடம் மனு

By

Published : Jan 28, 2020, 2:10 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக அவரது வலது கால் சமீபத்தில் அகற்றப்பட்டது. இதேபோன்று இவரது கணவர் மற்றும் மகனும் கால்கள் செயலிழந்தவர்கள். ஜெயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், மஞ்சுளா தம்பதிக்கு பத்து லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளதாகவும் இதற்கு அவர்கள் பத்திரம் எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலட்சுமியின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுவதால் பணத்தை திரும்பத் தருமாறுக் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் பணத்தை தர முடியாது உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என மிரட்டியதாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஜெயலட்சுமி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜெயலட்சுமி தனது சக்கர நாற்கலியில் அமர்ந்து தனது கணவர் மற்றும் மகனுடன் வந்து ஆட்சியர் விஜயலட்சுமியிடம் தன்னிடம் கடன் பெற்றுக் கொண்டு மிரட்டிவரும் ஜெயராமன் மஞ்சுளா தம்பதி மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு மனு அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

இதையும் படிங்க :'விருது கொடுத்தவரை உதைப்பேன் எனும் ஸ்டாலின் பேச்சு' - பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details