தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கியில் கடன் தராததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி! - kanakkampatti man suicide attempt for not give bank loan

திண்டுக்கல்: வங்கியில் கடன் தராததால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை காவல் துறையினர் தடுத்து காப்பாற்றினர்.

மாற்றுத்திறனாளி பிரபு.

By

Published : Sep 30, 2019, 2:23 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் தேநீர் கடை நடத்திவருகிறார். இந்நிலையில் இவர் தனது கடையை விரிவுபடுத்துவதற்கு அருகில் உள்ள வங்கியில் பலமுறை கடன் கேட்டும் கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்துக்கு வந்த இவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details