ஆண்டுக்கு சுமார் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமான கொடைக்கானலில், விதிகளை மீறி கட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதன் முதற்கட்டமாக அந்த கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள், வியாபாரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கச் சென்றனர்.
'விதிமீறல் கட்டிடங்களை இடிக்க வேண்டாம்..!' - அதிகாரிகளிடம் மக்கள் மனு! - விதி மீறல்
திண்டுக்கல்: நீதிமன்ற உத்தரவின்பேரில் கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டாம் என, மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முறையிட்டனர்.
அப்போது, அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் வியாபாரிகள் மற்றும் முன்னாள் நகர்மன்ற தலைவர் இப்ராஹிம் கூறுகையில்,
கொடைக்கானலில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுலா வாசிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்தால் கட்டிட உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களின் வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அந்த கட்டிடங்களை இடிக்க கூடாது. இந்த கட்டிடம் இடிப்பு பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்தால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.