தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: பறவைக்காவடியில் வந்த பக்தர்கள் - திண்டுக்கல் செய்திகள்

திண்டுக்கல்: பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடியில் வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபட்டனர்.

பழனி பங்குனி உத்தர திருவிழாவில் பறவைக்காவடி
பழனி பங்குனி உத்தர திருவிழாவில் பறவைக்காவடி

By

Published : Mar 31, 2021, 3:09 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் தற்போது பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு வந்துசெல்கின்றனர்.

சேலம் மாவட்டம் அரிசி பாளையத்திலிருந்து பழனிக்குப் பாத யாத்திரை வந்த பக்தர்கள், பழனி சண்முக நதியில் புனித நீராடி பின்பு உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி ஐந்து பக்தர்கள் பிரமாண்டமான பறவைக்காவடி எடுத்துவந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடியே மேளம் அடித்துக்கொண்டு வந்து பழனிமலையை கிரிவலம் வந்து பாதவிநாயகர் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி நிறைவுசெய்தனர்.

மேலும் ஆண்கள், பெண்கள் என அலகு குத்தியும், தீர்த்தக்காவடிகள் எடுத்தும் பழனி முருகனைத் தரிசனம்செய்தனர்.

இதையும் படிங்க:தேர்தலுக்காக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details