திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, கோயில்கள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது கரோனா தொற்று குறைந்துவருவதால், வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று (ஜூலை 5) முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன.
6 மணி முதல் பக்தர்கள் அனுமதி
அந்த வகையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சாமி கோயில் இன்று (ஜூலை 5) முதல் திறக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.