தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி நாளில் பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - Devotees wait in long queues

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் இன்று (அக்-24) அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் குவிந்தது.

Etv Bharatபழனியில்  குவிந்த பக்தர்கள் கூட்டம் - தீபாவளி சிறப்பு தரிசனம்
Etv Bharatபழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - தீபாவளி சிறப்பு தரிசனம்

By

Published : Oct 24, 2022, 12:38 PM IST

திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தீபாவளி பண்டிகை நாளில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலை மீது ஏறிச் சென்று வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - தீபாவளி சிறப்பு தரிசனம்

இதனால் கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் ஒரு மணி நேரமும், பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் இரண்டு மணி நேரமும் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வீடியோ: பூரி கடற்கரையில் காளி தேவி மணல் சிற்பம்

ABOUT THE AUTHOR

...view details