தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் குவிந்த பக்தர்கள் - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கோவிட் தொற்று

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது. அதில் வார இறுதி நாள்களில் கோயிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் பழனியில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர்

By

Published : Jan 7, 2022, 4:22 PM IST

திண்டுக்கல்:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இரவு நேர ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களில் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்றுமுதல் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகைதந்துள்ளனர்.

மலையடிவாரத்தில் குவிந்த பக்தர்கள்

பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலைமீது அனுமதிக்கப்படாத நிலையில் மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் வலம் வந்துவிட்டு சென்றுவருகின்றனர். கோயில் நிர்வாகம், தொடர்ந்து பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதை அறிவுறுத்திவருகிறது.

பழனிக்கு பாத யாத்திரை வந்த பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் ஏற்கனவே தங்களது ஆன்மிகப் பயணத்தை முடிவுசெய்திருந்ததால் கோயில்களில் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தும் பழனிக்கு வருகைதந்துள்ளனர். மலையடிவாரத்திலுள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் பொருள்களை வாங்கிக் கொண்டு சென்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் வழங்கப்படும் பொங்கல் பரிசை வைத்து என்ன செய்ய முடியும்? - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details