திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீமஹாலட்சுமி திருக்கோயில். இக்கோயிலில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை திருநாளையொட்டி உற்சவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
குறும்பர் இன மக்கள் மட்டும் பங்குபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இன்று நடைபெற்ற இத்திருவிழாவிலும் அவர்களின் பாரம்பரிய நடனமான வீரமுஷ்டி நடனமாடியும் கையில் தீ பந்தம் ஏந்தியும் பக்தர்களை சுற்றி வந்தனர்.