திண்டுக்கல்:சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி (04.08.22 )இன்று காலை நடைபெற்றது.
இவ்விழாவில் மகாலட்சுமி அம்மன் உற்சவர் சிலை அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோயிலுக்கு வந்தடைந்த உடன் கோயில் முன்பாக அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.
திண்டுக்கல் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்! கோயில் பூசாரி, அமர்ந்திருந்த பொதுமக்களின் தலையில் தேங்காய்களை உடைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இந்நிகழ்வில் இக்கிராம மக்கள் மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் கிராமம் மற்றும் வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து, தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.
இந்நிகழ்வானது ஏராளமான பொதுமக்களோடு ஆரவாரமாக நடைபெற்றது.
இதையும் படிங்க:ரூ.30 கோடி மதிப்பிலான வருவாய் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்