தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்! - தலையில் தேங்காய் உடைக்கும் விழா

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைப்பட்டி மகாலட்சுமி திருக்கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு செய்தனர்.

coconut

By

Published : Oct 12, 2019, 6:15 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பண்ணைப்பட்டி ஸ்ரீமகாலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புரட்டாசி மாதம் என்றாலே மிகவும் பிரசித்தி. இந்நிலையில் புரட்டாசியின் கடைசி சனிக்கிழமையையொட்டி செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு புரட்டாசி மாதத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பல்வேறு வேண்டுதல்களை நிரைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஆலய பூசாரி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இதையும் படிங்க: அபாயகரமான மின் பெட்டியை அகற்ற கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details