பழனி அருகே கணக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கு, பொட்டப்பட்டி பகுதியில் தோட்டம் ஒன்று சொந்தமாக உள்ளது. அங்கு சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் சின்னதுரைக்கு சொந்தமான தோட்டத்தில் 100 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பழனி அருகே 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
திண்டுக்கல்: பழனி அருகே 100 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கைப்பற்றி அழித்தனர்.
பழனி அருகே 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
பின்னர் மதுவிலக்கு ஆய்வாளர் வெங்கடாச்சலம் தலைமையிலான காவல் துறையினர் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் 100 லிட்டர் சாராய ஊறல்களை அழித்த காவல்துறையினர், தப்பியோடிய தோட்ட உரிமையாளர் சின்னதுரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு
!