தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடாது துரத்தும் லஞ்ச ஒழிப்பு துறை... வேலுமணி உறவினர் வீட்டிலும் சோதனை - முன்னாள் அமைச்சர் வேலுமணி

திண்டுக்கல்: இடையகோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி புதூரில் வசித்துவரும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான சதாசிவம் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

raids
raids

By

Published : Aug 10, 2021, 12:06 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் காலை 6 மணிமுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், இவருக்குத் தொடர்புடைய 52க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

அந்த வகையில், சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி புதூர் கிராமத்தில் வசிக்கும் எஸ்.பி. வேலுமணி உறவினரான சதாசிவம் வீட்டில், டிஎஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது சாலை அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடு செய்ததாகவும், அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை

ABOUT THE AUTHOR

...view details