திண்டுக்கல்:பழனி அருகே நெய்க்காரப்பட்டி இரவிமங்கலம் பகுதி அமைந்துள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த சண்முகம், ஒரு ஆண்டுக்கு முன்னர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்டவர்களை, விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக அழைத்துவந்து தங்கவைத்துள்ளார்.
பின்னர் சண்முகம், அவரது மனைவி தங்கம் ஆகியோர் நாள் முழுவதும் கரும்புத் தோட்டங்களில் வேலை வாங்கிவிட்டு உணவு, கூலி கொடுக்காமல் கொத்தடிமைகளாக நடத்திவந்துள்ளனர்.
கடந்த ஓராண்டாகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்த கூலித் தொழிலாளர்கள், நேற்று (ஜூன் 27) சண்முகத்திடமிருந்து தப்பி, நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.