திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் பிரபல துணிக்கடை இயங்கிவருகிறது. இங்கு கும்பகோணம் சீமக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை(ஏப்.28) முதல் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், இன்று (ஏப்.30) இளைஞர் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது.
திண்டுக்கலில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் அருகே அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![திண்டுக்கலில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு! அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11594342-thumbnail-3x2-.jpg)
அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
உடனே அருகிலிருந்த சக நண்பர்கள் ரஞ்சித்குமாரின் அறையை உடைத்து உள்ளே சென்றனர். அறையினுள் அவர் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளைஞரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆலங்குடியில் பச்சிளங்குழந்தையின் உடல் மீட்பு!