திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிக்குள் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வன விலங்குகளான காட்டெருமை , மான், பன்றி உள்ளிட்டவை உணவு தேடி நகர் பகுதிக்குள் வரும் நிலையில், வாகனங்களில் அடிபட்டும், பிளாஸ்ட்டிக் குப்பைகளை தின்றும் இறப்பது வாடிக்கையாக இருக்கிறது.
தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு - கொடைக்கானலில் மான் உயிரிழப்பு
திண்டுக்கல்: கொடைக்கானலில் தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.
Dear death in Kodaikanal
இந்நிலையில், உணவு தேடி செவன்ரோடு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை தெருநாய்கள் கடித்தது. உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அந்த மான் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானிற்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், புள்ளி மான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.