தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலுக்கு எதிர்ப்பு; காதலியின் தந்தையை காரில் கடத்த முயற்சி - காதலன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: காதலியின் தந்தையை தன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்த முயன்ற காதலன் உட்பட அவரது நண்பர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

dgl
dgl

By

Published : Jan 23, 2020, 10:06 AM IST

ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி. நகரைச் சேர்ந்தவர் டேனியல். இவரது மகள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். அதேபோல் தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சுரேஷ். இவர் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் துணை நடிகராக சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்.

சுரேஷும் மருத்துவக் கல்லூரி மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தந்தை டேனியல் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகளைக் கண்டித்துள்ளார். தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்க மாணவியும், சுரேஷின் தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சுரேஷ் மருத்துவக்கல்லூரி மாணவி மற்றும் அவரது பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், மாணவியன் தந்தை டேனியல் வேலை விஷயமாக, தனது காரில் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்பொழுது காரில் டேனியலை பின்தொடர்ந்து வந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஆடலூரைச் சேர்ந்த மணிகண்டன், தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த அருண்குமார், விஜய் ஆகியோர் டேனியலின் காரை மறித்து அவரை கொலைவெறித் தாக்குதல் நடத்தி, காரில் கடத்த முயற்சித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் அவரது நண்பர்கள்

இச்சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் டேனியலை மீட்டனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார், காரில் தப்பியோட முயற்சித்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களைக் கைதுசெய்து, அவர்கள் சென்ற காரையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட குழந்தை; 8 நாட்களுக்குள் மீட்பு - குழந்தை மீட்கப்பட்ட பின்னணி நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details