திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளளவையும் எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
அப்போது குதிரையாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லக்கூடிய தரை பாலத்தை அடித்து சென்றது. இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீர் அளவு குறையாததால் பாலத்தை சரி செய்ய முடியவில்லை என பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.