தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பொருட்கள் விற்பனை 8% அதிகரிப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ்! - இன்றைய திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு பணியில் ஈடுபட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை சரி செய்து வருவதன் மூலமாக 8 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

Dairy Minister Mano Thangaraj said aavin sale has 8 percent increased by management irregularities correction
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 9:52 PM IST

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

திண்டுக்கல்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஆய்விற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் தற்பொழுது ஆவின் நிர்வாகம் எந்த ஒரு ஒளிவு மறைவு தன்மையின்றி வெளிப்படை தன்மையாக செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை தொடர்ந்து சரி செய்து வருகிறோம். குறிப்பாக மார்க்கெட்டிங் உள்ள பிரச்சினைகளை சீர் செய்ததன் காரணமாக தற்பொழுது 8 சதவீதம் விற்பனை பெருகி உள்ளது. இந்த மாதம் கணக்கிட்டு பார்த்தால் மேலும் கூடுதலாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி விற்பனையாளர்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் மூலம் கையாளப்படுகின்ற பால் மற்றும் பால் பொருட்கள் கையாளுகின்ற அளவினை பெருக்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இன்றைக்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, ஆவினுடைய கொள்முதலை கையாள்வதற்கான திட்டங்கள் தொலை நோக்கு பார்வையோடு மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு பல லட்சக்கணக்கான கறவை மாடுகள் புதிதாக வாங்குவதற்கு குறைந்த வட்டியில் வங்கி கடனுக்கான ஏற்பாடுகளும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

தற்பொழுது பட்டர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்கள் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயக் பெருங்குடி மக்களுக்கு தேவையான கடன் உதவி மானியங்களை வங்கிகளில் பேசி குறைந்த வட்டிக்கு கடனும் பெற்றுத் தந்து வருகிறோம். நாட்டு இன மாடுகள் அழிந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து நாட்டு இன மாடுகளை விவசாயிகளுக்கு கண்டறிந்து கொடுக்க வேண்டி உள்ளது. இது எல்லாம் எங்கள் திட்டங்களில் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு; அக்.30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details