திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்லாங்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். முருகேசன், அவரது மாமியார் புஷ்பம் ஆகியோர் குடிசையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாட அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றனர்.
பின்னர், வீட்டில் அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பற்றியதால் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இரண்டு குடிசைகள் முழுமையாக தீக்கிரையாயின. வீட்டிலிருந்த கார், ஒரு பைக், உடைகள், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உள்பட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.