தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் தேக்கமடைந்த காய்கறிகள், பழங்கள் - corona latest news

திண்டுக்க‌ல்: ஊரடங்கு உத்தரவால் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருவதாக கொடைக்கான‌ல் விவசாயிகள் தெரிவித்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் அவற்றை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துவருகிறது.

dindigul
dindigul

By

Published : Apr 25, 2020, 1:17 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் மலைப் பகுதிகளில் பிரதான தொழில் மலை பயிர் விவசாயம். அதன்படி, அங்கு ப‌ல‌ ஏக்க‌ரில் ம‌லை காய்க‌றிகளான‌ கேர‌ட், உருளைக் கிழ‌ங்கு, பீன்ஸ் மற்றும் கோடை கால‌ ப‌ழ‌ங்களான‌ பிள‌ம்ஸ், பிச்சீஸ் உள்ளிட்டவைகள் பயிரிடப்படுகின்றன.

இந்த நிலையில் கரோனா காரணமாக ஊர‌ட‌ங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான‌ காய்க‌றிக‌ள், வாழை, வெள்ளைப் பூண்டு, ப‌ழ‌ங்க‌ள் தேக்கமடைந்துள்ள‌தாக அப்பகுதி‌ விவ‌சாயிக‌ள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவற்றை சந்தைப்படுத்த‌ முயற்சிகள் எடுக்க தொடங்கியது.

கொடைக்கால் காய்கறி, பழங்கள் விவசாயம்

இதுகுறித்து தோட்டக் ‌க‌லை துணை இய‌க்குன‌ர் சீனிவாச‌ன் கூறுகையில், ”கொடைக்கானல் விவசாயிகள் சாகுப‌டி செய்யும் அனைத்து ப‌ழ‌ங்க‌ளையும் பழ‌னியில் உள்ள‌ மாவட்ட குளிர் சாத‌ன‌ கிட‌ங்கில் ஊர‌ட‌ங்கு முடியும்வ‌ரை வைத்து கொள்ள‌லாம். தமிழ்நாட்டில் மிளகு சாகுபடியில் கொடைக்கானல் முதலிடம் வகிக்கிறது.

மிள‌கு சாகுப‌டி தொடங்கினாலும் ஆட்க‌ள் பற்றாக்குறையால் மிள‌கு எடுக்க‌ முடிய‌வில்லை என‌ விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. அதனால் வெளியூர்க‌ளில் இருந்து சிற‌ப்பு அனும‌தியோடு ஆட்களை வ‌ர‌வ‌ழைத்து எஸ்டேட்க‌ளில் த‌ங்கி வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வீடுகளுக்கே பழங்கள், காய்கறிகள் வரும்: ஸ்விகிக்கு வழிவிட்ட அரசு!

ABOUT THE AUTHOR

...view details