தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா : அலைமோதிய மக்கள் கூட்டம் - பங்குனி உத்திரத் திருவிழா

பழனியில் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா : அலைமோதிய மக்கள் கூட்டம்
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா : அலைமோதிய மக்கள் கூட்டம்

By

Published : Mar 27, 2022, 10:56 PM IST

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா நிறைவடைந்தும் பங்குனி மாதம் முடியும் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் இன்று (மார்ச் 27) விடுமுறை நாள் மற்றும் முகூர்த்த நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‌சாமிதரிசனம் செய்ய குவிந்தனர்.

ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்:மேலும், பழனி அடிவாரம் மற்றும் நகர் பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். படிப்பாதை, மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை மூலம் மலைக்கோயில் சென்ற பக்தர்கள் சுமார் ஐந்து மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் மொட்டையடிக்கும் உள்ள இடங்களில் முடி காணிக்கை செலுத்துவதற்காக அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 394 பேருக்கு கரோனா சிகிச்சை

ABOUT THE AUTHOR

...view details