திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நினைவு கூறும் விதமாக கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து சிலுவைப்பாதை ஊர்வலம் தொடங்கியது.
கொடைக்கானலில் சிலுவை பாதை நிகழ்ச்சி தொடக்கம்! - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்
திண்டுக்கல் : இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நினைவு கூறும் விதமாக கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து சிலுவைப்பாதை ஊர்வலம் தொடங்கியது.
கொடைக்கானலில் சிலுவை பாதை நிகழ்ச்சி தொடக்கம்
பேருந்து நிலையத்தில் தொடங்கிய சிலுவைப்பாதை ஊர்வலம் திரு இருதய ஆண்டவர் ஆலயம் வரை பதினான்கு நிலைகளாக நடைபெற்றது. ஒவ்வொரு நிலையிலும் இயேசு கிறிஸ்து எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பதை நினைவு கூறும் விதத்தில் ஜெபங்கள், பாடல்கள் பாடி மக்கள் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனையும் நடைபெற்றன.
இதையும் படிங்க:மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டியுடன் சிறப்பு நேர்காணல்!