காவிரி ஆற்றில் ராசிமணல், ஊட்டமலை, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகள் முதலைகள் வாழ்விடமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மெயின் அருவிக்கு அருகே பாறையின் மீது முதலை அமா்ந்திருப்பதை மக்கள் பார்த்தனர்.
ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றித்திரிந்த முதலையை பிடித்த வனத்துறை! - ஒகேனக்கல் மெயின் அருவி
திண்டுக்கல்: ஒகேனக்கல் மெயின் அருவி அருகே நீர்வரத்தில் அடித்துவரப்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்து மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால், முதலையை பிடிப்பதற்கு வனத்துறையினர் வருவதற்குள் முதலை நீருக்குள் மூழ்கியது. இந்நிலையில், இன்று(ஆக.11) மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் அருகே முதலை இருந்ததை கண்டனர். இதுதொடர்பாக உடனே அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஒகேனக்கல் வனத்துறையினர் முதலையை லாபகமாக பிடித்து, முதலைகள் மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
இதன் காரணமாக, ஒகேனக்கல் மெயின் அருவி பகுதி மக்களிடையே இரண்டு நாட்களாக இருந்த முதலை நடமாட்டம் குறித்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது.