தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நள்ளிரவில் இருவருமே மருத்துவமனையை விட்டு தப்பியோடியுள்ளனர்.