தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 14 ஆண்டு சிறை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திண்டுக்கல்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

court
court

By

Published : Oct 15, 2020, 5:28 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவிற்கு உள்பட்ட கள்ளிமந்தயம் அருகேயுள்ள கொத்தயம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 2014ஆம் ஆண்டு பிரகாஷ் என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது குறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒட்டன்சத்திரம் லக்கயன்கோட்டையைச் சேர்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரகாஷ் என்பவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து குற்றவாளி பிரகாஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


ABOUT THE AUTHOR

...view details