திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் மணல், செம்மண் கொள்ளை, கல் குவாரிகள் சுரண்டல் உள்பட அரசு அனுமதி இல்லாமல் அதிக அளவில் நடைபெறுவதாக பல்வேறு தரப்பினரால் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், மாவட்ட கனிமவள அலுவலராக பணிபுரியும் பெருமாள் மற்றும் அவரின் கீழ் உள்ள அலுவலர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கனிம வளங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி அளிப்பதாக புகார்கள் வந்துள்ளன.
மாவட்ட கனிம வள அலுவலகத்தில் திடீர் ஆய்வு அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை, காவல்துறையினர் இணைந்து இன்று (அக்.,20) மாலை 6 மணிக்கு திடீரென திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர சுந்தராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது. தொடர்ந்து பெருமாள் உள்பட அனைத்து அலுவலர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.
இதையும் படிங்க:'SMS'ஐ கடைபிடிங்கள்: மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்