நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 65 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டட வேலைக்கு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தனியார் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கோட்டாட்சியர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த 65 தொழிலாளர்களும் காவல்துறையினால் மீட்கப்பட்டு அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் சமூக விலகல் இன்றி ஒன்றாக இருந்ததன் காரணமாக கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் இருந்தது.
மேற்கு வங்க கட்டிடத் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட 65 பேருக்கும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஐந்து பேருக்கும் இன்று கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ‘2 முறை சோதனையில் இல்லை... 3ஆவது முறையில் கரோனா உறுதி’ - கீழமாத்தூருக்கு சீல்!