திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த 234 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 173 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். பின்பு அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய 1000 பேரின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அத்தியாவசிய சிகிச்சைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உள்நோயாளியாக உள்ளவர்களுக்கு உதவியாக ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடி காணப்படும் அரசு மருத்துவமனை மேலும் மருத்துவமனையின் உள்ளே உள்ள அம்மா உணவகம், மருந்தகம் உள்ளிட்ட இடங்களில் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் உள்ளே வருபவர்கள் வெளியே செல்பவர்கள் அனைவருக்கும் கைகளில் சேனிடைசர் தெளிக்கப்படுகிறது. நோயாளிகளைப் பார்க்க வருபவர்களின் வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரக்கூடிய தலைமை மருத்துவமனை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க... மூன்று பேர் மரணம்: தமிழ்நாடு அரசு விளக்கம்