தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ்: தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பரிசோதனை! - கரோனா வைரஸ்

திண்டுக்கல்: கரோனா வைரஸ் காரணமாக வத்தலகுண்டு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தூய்மை காவலர்களுக்கு சுகாதார பரிசோதனை
தூய்மை காவலர்களுக்கு சுகாதார பரிசோதனை

By

Published : Apr 18, 2020, 12:09 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு தேர்வு நிலை பேரூராட்சியில் கரோனா வைரஸை தடுப்பதற்காக பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று தூய்மைப்படுத்தும் சிறப்பு சுகாதார பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரத்தை பரிசோதிக்கும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வத்தலகுண்டு சமுதாயக் கூடத்தில் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.

தூய்மை காவலர்களுக்கு சுகாதார பரிசோதனை நடைபெறும் காட்சி
இம்முகாமில் காய்ச்சல், வெப்பநிலை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பு ஊசி மற்றும் மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details