இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வெளியூர்வாசிகளை முகப்புப் பகுதிகளிலேயே பரிசோதனை செய்து அனுமதிக்க கோரிக்கை - tourists should thoroughly inspected before enter the kodaikkanal
திண்டுக்கல்: வெளிமாவட்டங்களில் இருந்து படையெடுத்து வரும் பயணிகளை தடுக்க முகப்புப் பகுதிகளிலேயே பரிசோதனை செய்து, அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுலா தலமான கொடைக்கானலில் இதுவரை 7க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது கொடைக்கானலுக்கு வரக்கூடிய வெளி மாவட்டம், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் வருகை சற்று அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொற்று அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானலுக்கு வரக்கூடியவர்களை முகப்புப் பகுதிகளிலேயே முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால், அவர்களுக்கு கடன் உதவிகளை வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் என பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.