திண்டுக்கல்:மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக இன்று (ஜூலை 10) அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்வதற்கு வருகைதந்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவு, பரிசோதனை கருவிகள் மையம் திறப்பு, கருவுற்ற தாய்மார்கள் மற்றும் திருநங்கைகளுக்கான கரோனா தடுப்பூசித் திட்டம் உள்ளிட்ட பணிகளை மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்து ஆய்வுமேற்கொண்டார்.
கட்டுக்குள் கரோனா
இந்த ஆய்வின்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா மூன்றாவது அலையானது வரக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் எண்ணம், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவருகிறது.
'கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா' - சொல்கிறார் மா.சு. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது ஆய்வுசெய்து வருகிறேன். அதன்படி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
100 படுக்கை வசதிகள் கொண்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டுவருகின்றன, அதன்படி திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 70 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 30 வென்டிலேட்டர் படுக்கை வசதிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவ மனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைக்காயம் பிரிவு, நரம்பு பிரிவு ஆகியவற்றிற்கு உடனடியாக
மருத்துவர்கள்பணி அமர்த்தப்படுவார்கள். தற்காலிகப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், 108 பணியாளர்கள் போன்றவர்களுக்கு முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று நிரந்தரப் பணி அல்லது பணி கால நீட்டிப்புச் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மருத்துவமனையில் தொற்று காலகட்டத்தில் பேக்கேஜ் முறையில் வசூல்செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் புகார் அளித்தால் விசாரணை செய்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு முழு விவரம்!