திண்டுக்கல்: சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா அச்சம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்துமே முடக்கப்பட்டுள்ளன.
தற்போது அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் காரணமாக, கொடைக்கானலுக்கு வருகை தரக்கூடிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.08) கொடைக்கானல் அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விசாகன் நூறு விழுக்காடு மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி
அப்போது ஒரே நேரத்தில் 50 பேருக்கு சிகிச்சையளிக்கக்கூடிய ஆக்ஸிஜன் வசதி கொண்ட கட்டடத்தை விரைந்து முடிக்க, ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கொடைக்கானலில் நூறு விழுக்காடு மக்களுக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. மேலும் கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு விதித்துள்ள கரோனா விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த ஆய்வின்போது கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:சென்னை வந்த 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்