திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.