திண்டுக்கல்லில் நேற்று (ஏப். 30) தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துு 625 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், அரசுத் திட்டப்பணிகள், ஆவணப் பராமரிப்பு, வரிவசூல் எனப் பல இடைவிடாத பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்துவருகிறது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒட்டுவில்லை ஒட்டும் பணி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி, வெளியூர்களிலிருந்து உள்ளூருக்கு வருவோரைக் கணக்கெடுக்கும் பணி போன்றவற்றால் பணிச்சுமை அதிகமாக உள்ளது.