கரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.4,000 குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்டது.
கொடைக்கானலில் கரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணை ரூ. 2000 வழங்கிய எம்.எல்.ஏ. - Corona relief fund
திண்டுக்கல்: கரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணையாக ரூ. 2000 மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பும் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணையாக ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளான தாண்டிகுடி, பண்ணைகாடு, பூலத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மக்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்கினார்.