தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு - corono precautions dindigul

திண்டுக்கல்: கொரோனா வைரஸ் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By

Published : Mar 16, 2020, 1:10 PM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமையன்று குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூடிய கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை, குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு மருத்துவக் குழுவினர் விளக்கினர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதன் ஒரு பகுதியாக, கை கழுவுவது, அதன் அவசியம் குறித்தும், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அசைவ உணவு உண்பவர்கள் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். முடிந்தவரை நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: பொதுமக்களே உஷார்..போலி கால் சென்டர் சலுகைய நம்பி ஏமாறாதீங்கோ!

ABOUT THE AUTHOR

...view details