தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையிலிருந்து தப்பியோடும் கரோனா நோயாளிகள்: பொதுமக்கள் அச்சம் - தப்பியோடும் கரோனா நோயாளிகள்

திண்டுக்கல்: பழனி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து தப்பியோடும் கரோனா நோயாளிகள்
மருத்துவமனையில் இருந்து தப்பியோடும் கரோனா நோயாளிகள்

By

Published : Apr 23, 2021, 5:07 PM IST

பழனி அருகே குரும்பப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் மருத்துவமனையிலிருந்து தப்பியுள்ளார். இதுதொடர்பாக தப்பியோடிய பெண்ணை நகர காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் இதேபோல் நேற்று (ஏப்.23) தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த, கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும், நெய்க்காரபட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையை விட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து நெய்க்காரப்பட்டியை சேர்ந்த இளைஞர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினார். தப்பியோடிய பெண்ணை காவல் துறையினர் பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த சில நாள்களாக கரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக அரசு மருத்துவமனையில் இருந்து கரோனா நோயாளிகள் தப்பி ஓடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா 2.0: 'பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் நிற்போம்'

ABOUT THE AUTHOR

...view details