இந்நிலையில் அவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தையிலுள்ள அவரது கமிஷன் கடைக்கு நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வியாபாரிக்கு கரோனா- கடைக்கு சீல்! - காய்கறி கடைக்கு சீல்
திண்டுக்கல்: தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வியாபாரி ஒருவருக்கு கரோனோ தொற்று கண்டறியப்பட்டத்தைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலர்கள் அவரது கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Corona for vegetable market dealer
ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி சந்தையில் பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவமணி என்பவர் காய்கறி கமிஷன் கடை நடத்தி வருகிறார்.
இவர் சமீபத்தில் வத்தலகுண்டில் உறவினர் வீட்டிற்குச் சென்று வந்ததால், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கரோனோ பரிசோதனை செய்துள்ளார்.
மேலும் கடையில் பணியாற்றிய பணியாளர்கள் 5 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், “மூத்த அலுவலர்களின் ஆலோசனைக்கு பின் சந்தையை மொத்தமாக மூடுவதா அல்லது தொடர்ந்து ஒரு கடையை மட்டும் மூடுவதா என்று முடிவெடுக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் இரண்டு ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!