திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி பகுதிக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூரிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், மதுரை காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று வந்த, நத்தம் காமராஜ் நகரை சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா எதிரொலி: கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு! - தமிழ்நாடு கரோனா செய்திகள்
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் நான்கு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சியில் செயல்பட்டு வரும் கடைகளின் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நத்தத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக நத்தம் பேரூராட்சி மற்றும் நத்தம் வர்த்தகர் சங்கம் சார்பாக பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நத்தம் பகுதியில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை முதல் பேரூராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் மலை 4 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த நேர கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் எனவும் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.