தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் போறீங்களா? கரோனா பரிசோதனை கட்டாயம்! - கொடைக்கானலுக்கு வரும் நீங்க இதை கண்டிக்க பண்ணனும்...

கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கரோனா நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

CORONA CHECKING for KODAIKANAL TOURIST
CORONA CHECKING for KODAIKANAL TOURIST

By

Published : Jan 14, 2022, 10:06 AM IST

திண்டுக்கல்:கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கரோனா பரிசோதனை செய்தபிறகு கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ள நிலையில் மற்ற நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராக உள்ளது. இதையடுத்து கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி அருகே கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா பரிசோதனை

அதேபோல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய பூங்காக்களுக்கு செல்வதற்கு 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேபோல கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு இல்லங்களில் உள்ள படகுகளில் சவாரி செய்வதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நோய்த்தொற்று பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details