தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடல்! - கரோனா

திண்டுக்கல்: கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வசித்துவந்த பேகம்பூர் பகுதியை காவல்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடல்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடல்!

By

Published : Apr 2, 2020, 11:29 AM IST

நாடு முழுவதும் கரோனா நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மத கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து சென்றவர்களில் பெரும்பாலோனோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சென்ற 89 பேரில் 48 பேர் கண்டறியப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 17 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு செய்ய தேனி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடல்!

இந்நிலையில் ஆய்வுக்கு அனுப்பபட்ட 17 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் வசித்த பேகம்பூர், மக்கான் தெரு, நத்தர்ஷா தெரு, பூச்சி நாயக்கன்பட்டி, தோமையார்புரம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து, தனிமைப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக பேகம்பூர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்று உள்ளதால், அப்பகுதி மக்களின் அத்தியாவசிய பொருள்களை, வாகனங்கள் மூலம் கொண்டுசென்று கொடுக்க அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதேபோல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வராமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கரோனா பெருந்தொற்று உள்ளதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வனத்துறைக்குள் சுற்றித் திரிந்த இருவர் - கரோனா தொற்று பரவும் அபாயம்

ABOUT THE AUTHOR

...view details