திண்டுக்கல்:கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே சாரல் மழையால் மலைப்பகுதிகள் எங்கும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்த ரம்மியமான சூழல் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.
குளு குளு கொடைக்கானலில் குவியும் மக்கள் கூட்டம் - குவியும் மக்கள் கூட்டம்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சாரல் மழையுடன் ரம்மியமான சூழல் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானல் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

குளு குளு கொடைக்கானல்; குவியும் மக்கள் கூட்டம்
குளு குளு கொடைக்கானல்; குவியும் மக்கள் கூட்டம்
குறிப்பாக பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, குணாகுகை, மோயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் குவிகிறது. மலைவளங்களின் அழகை ரசித்தும், படகு சவாரியில் ஈடுபட்டும், குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வனத்துறையினரின் வலையில் சிக்கிய இரண்டு கரடிகள்!